Tuesday, August 12, 2008

ஆகஸ்டு 11

1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.

1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.

1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.

1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களேஇ ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".

1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.

2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.

2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

No comments: